89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘போலீஸ் இருப்பாங்க... ஹெல்மெட் போடுங்க!’ - கூகுள் மேப்பில் பயனர் அலர்ட்

‘போலீஸ் இருப்பாங்க... ஹெல்மெட் போடுங்க!’ - கூகுள் மேப்பில் பயனர் அலர்ட்

சென்னை: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் என்பது உயிர் காக்கும் கவசம். இந்தச் சூழலில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு கூகுள் மேப்பில் அலர்ட் கொடுத்துள்ளார் பயனர் ஒருவர். அதுவும் இந்த லொக்கேஷன் சென்னையில் இருந்தது நெட்டிசன்களின் கவனத்தை பெற்றது.

ஏதேனும் ஒரு புதிய இடத்துக்கோ அல்லது ஊருக்கோ செல்வதென்றால் பெரும்பாலனவர்கள் இப்போது கூகுள் மேப்ஸ் துணையை நாடுவதுண்டு. லொக்கேஷனை பகிர்ந்தால் போதும் அட்ரஸ் இல்லா தெருக்களை கூட கூகுள் மேப்ஸ் அறியும் என சொல்லலாம். அந்த அளவுக்கு உலகம் முழுவதும் இந்த அப்ளிகேஷன் மிகவும் பிரபலம். இந்தியாவில் தினந்தோறும் கூகுள் மேப்ஸில் 5 கோடிக்கும் மேற்பட்ட இடங்கள் குறித்து பல்வேறு மொழிகளில் தேடலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொலைவு சுமார் 2.5 பில்லியன் கிலோ மீட்டர் என சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் சென்னை, வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஒரு இடத்தை பயனர் ஒருவர், ‘போலீஸ் இருப்பாங்க... ஹெல்மெட் போடுங்க’ என மேப் செய்துள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1QHTC4x
via IFTTT