89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil

3-வது வாரமாக கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் இருந்து 5 வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம்

கும்பகோணம்: புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு இன்று (அக்.5) மூன்றாவது வாரமாக கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் இருந்து 5 வைணவ கோயில்களுக்கு ஆன்மிக பயணம் இன்று காலை தொடங்கியது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் கும்பகோணம் பகுதியில் உள்ள 5 வைணவ கோயில்களுக்கு பக்தர்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படுவர் என இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, புரட்டாசி 3-வது சனிக்கிழமையான இன்று, கும்பகோணம் சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்கள், திருச்சேறை சாரநாத பெருமாள் கோயில், ஒப்பிலியப்பன் கோயில் வெங்கடாசலபதி கோயில், நாச்சியார்கோயில் சீனிவாச பெருமாள் கோயில் ஆகிய 5 வைணவ கோயில்களுக்கு, 3 வாகனங்களில் 35 பக்தர்கள் இன்று ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZRwIsXn
via IFTTT

திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்: முதல்வர் சந்திரபாபு பட்டு வஸ்திரம் காணிக்கை

திருமலை: புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா,நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலா கலமாக தொடங்கியது.

உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராய் மலையப்பர், விஸ்வக்சேனர் ஆகியோர் நேற்று மாலை தங்க கொடிமரம் வரை கொண்டு வரப்பட்டனர். அப்போது மேள தாளங்கள் முழங்க, வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓத, கருடன் சின்னம் பொறித்த கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2OQ7EfP
via IFTTT

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா கொடியேற்றம்

கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா கொடியேற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெரு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, அக்.3 பூர்வாங்க பூஜைகளுடன் இன்று காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்துக்கு 21 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, பூதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பலங்காரத்தில் காட்சியளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wZI6PQB
via IFTTT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா இன்று காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், அக்டோபர் 9-ம் தேதி பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 12-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி (பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புடைய தலமாதலால் இது முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9HarneD
via IFTTT

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர்.

இதையொட்டி, நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலாவாக கொண்டு வரப்பட்டு, கோயில் முன்புறமுள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு அணிந்தனர். விழா நாட்களில் இவர்கள் பல்வேறு வேடமணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rFKDTej
via IFTTT

வேண்டும் வரம் அருளும் நவராத்திரி வழிபாடு 2: ராஜ ராஜேஸ்வரி திருக்கோலம்

சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் தேவர்களை வீழ்த்தி இன்னல்கள் விளைவித்து வந்தனர். இவர்களின் அழிவுக் காலத்தில், ஆதிபராசக்தியிடம் இருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர். காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்டராத்திரிகளாகத் தோன்றினர்.

பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்ச மாலை, கமண்டலத்துடனும், வைஷ்ணவி என்ற விஷ்ணு சக்தி கருட வாகனத்தில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலருட னும், மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம், வரமுத்திரையுடனும், கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி மயூர வாகனத்தில் வேலாயுதத்துடனும், மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயுதத்துடனும், வாராஹி என்ற வாராஹியுடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும், சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியுடனும், நரசிம்ஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும் கொண்டு கமல பீடத்தில் தோன்றினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CrnEqPm
via IFTTT

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 4,000 பொம்மைகளுடன் பிரம்மாண்ட கொலு!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் 4 ஆயிரம் பொம்மைகள் கொண்ட பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலுவை பக்தர்கள், பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 21 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ நடராஜர் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவம் முன்னிட்டு நேற்று 21 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XHrVB4L
via IFTTT