கோடைக்காலத்தில் மென்பானங்களைக் குடிக்க விரும்பாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மென்பானங்களின் தித்திப்பான ருசியும், கண்ணைக் கவரும் வண்ணங்களும் நம்மை எளிதில் மயக்கிவிடுகின்றன. போதாக்குறைக்கு 'மென்பானங்களைக் குடித்தால் புத்துணர்வு கிடைக்கிறது' என்று பொய்ச் சொல்லும் ஊடக விளம்பரங்களும் நமக்குப் போதை ஏற்றிவிடுகின்றன. இந்த மென்பானங்கள் நம் தாகத்தைத் தணிக்க உதவுகின்றன என்பது உண்மை என்றாலும், இவற்றால் நமக்கு எத்தனை கெடுதல்கள் என்பதை நினைத்துப் பார்க்க மறந்து விடுகிறோம்.
மென்பானம் என்பது எது? - மென்பானம் (Soft drinks) என்பது அதிக அளவில் ‘ஃபிரக்டோஸ்' எனும் சர்க்கரையும் கார்பன்-டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். மென்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காக, காஃபீன் எனும் வேதிப்பொருளைச் சேர்க்கிறார்கள்; இனிப்பை நிலைப்படுத்துவதற்காகச் சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள்; வண்ணமூட்டுவதற்காக கேராமல், பீட்டா கரோட்டீனை பயன்படுத்துகிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pWcEdCf
via IFTTT