89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கோடை வெப்பத்தை தணிக்க பிரத்யேக ஏற்பாடு

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கோடை வெப்பத்தை தணிக்க பிரத்யேக ஏற்பாடு

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் சுட்டெரிக்கும் வெயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்களின் வழி தடத்தில் தண்ணீரை ஊற்றி வெப்பம் தணிக்கப்பட்டது.

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாக திருவண்ணாமலை அண் ணாமலையார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்துக்கு அடுத்தபடியாக ஆந்திரா, தெலங் கானா மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர். இதேபோல், கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது கணிசமாக உள்ளது. வார விடுமுறை நாட்களில் இயல் பைவிட, பக்தர்களின் வருகை அதிகளவில் இருக்கும். அதன்படி, அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று பக்தர்களின் வருகை அதிகாலை முதல் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pJfuMaY
via IFTTT