89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : குஜராத் | நவராத்திரி கொண்டாட்டத்தை ‘தடுத்த’ மின்வெட்டு... கைகொடுத்த ஓலா ஸ்கூட்டர்!

குஜராத் | நவராத்திரி கொண்டாட்டத்தை ‘தடுத்த’ மின்வெட்டு... கைகொடுத்த ஓலா ஸ்கூட்டர்!

சூரத்: இந்தியாவில் நவராத்திரி கொண்டாட்டம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன் காரணமாக நாடெங்கும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்நிலையில், குஜராத் நகரில் நேற்று கொண்டாட்டதின்போது மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதனால், கொண்டாட்டம் சில நிமிடங்கள் தடைபட்டுள்ளது. இருந்தும் ஓலா மின்சார ஸ்கூட்டர் கொண்டாட்டத்திற்கு கைகொடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் சூரத் நகரில் நடைபெற்றுள்ளது. இதனை ஷ்ரேயஸ் சர்தேசி ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ரங்கோலி கோலத்தை வலம் வந்த படி நடனம் ஆடுகின்றனர். அந்த வீடியோ ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால் மற்றும் பேடிஎம் நிறுவனம் விஜய் சேகர் சர்மா ஆகியோரது கவனத்தை பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GmkJ3la
via IFTTT