89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சொமேட்டோ Vs நேரடி உணவு ஆர்டர் கட்டண வித்தியாசத்தை பகிர்ந்த நெட்டிசன்: வைரலான காரசார விவாதம்

சொமேட்டோ Vs நேரடி உணவு ஆர்டர் கட்டண வித்தியாசத்தை பகிர்ந்த நெட்டிசன்: வைரலான காரசார விவாதம்

ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமேட்டோ மற்றும் ஆஃப்லைனில் உணவகத்தில் நேரடி உணவு ஆர்டருக்கான கட்டண வித்தியாசம் குறித்த விவரத்தை அதற்கான ரசீதுடன் பகிர்ந்துள்ளார் நெட்டிசன் ஒருவர். இது இணையவெளியில் காரசாரமான விவாதப் பொருளாகி உள்ளது. அது குறித்த விவரத்தை விரிவாக பார்ப்போம்.

இன்றைய ஸ்மார்ட்டான உலகில் நமக்கு பிடித்த உணவு, நமது வீட்டு வாசல் தேடி வந்து டெலிவரி செய்து செல்லும் ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களின் சேவையை பெரும்பாலான நகரவாசிகள் இருகரம் நீட்டி வரவேற்று, அதற்கு அமோக ஆதரவு வழங்கி வருகிறோம். குறிப்பாக, நமக்கு பிடித்த உணவகத்தில் அந்த உணவை ஆர்டர் செய்யும் ஆப்ஷனை இந்நிறுவனங்கள் வழங்குகின்றன. நாமும் கைபேசியை அற்புத விளக்காக பயன்படுத்தி தொடுதிரையில் விரல் நுனிகளில் தேய்த்து அதை ஆர்டர் செய்து, அந்த உணவு ஆவி பறக்க டெலிவரியும் பெறுகிறோம். அப்படி பிடித்த உணவை ஆர்டர் செய்யும் உற்சாக மிகுதியில் அதற்கு சரியான கட்டணத்தை தான் நாம் செலுத்துகிறோமோ என்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் கவனிப்பதில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iAPcE3e
via IFTTT