89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : எல்ஜிபிடிக்யூ+ சமூக பிரச்சினைகள் | பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சியை எப்படி வழங்கப்போகிறது அரசு?

எல்ஜிபிடிக்யூ+ சமூக பிரச்சினைகள் | பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சியை எப்படி வழங்கப்போகிறது அரசு?

"இந்த வழக்குக்கான தீர்ப்பை எனது இதயத்திலிருந்து எழுத நினைக்கிறேன். மூளையிலிருந்து அல்ல... இவ்வழக்கு தொடர்பான புரிதலுக்காக எனக்கு உளவியல் கல்வி தேவைப்படுகிறது. அதற்கான நேரத்தை நான் எடுத்துக்கொள்ள வேண்டும்” - எல்ஜிபிடிக்யூ+ சமூகம் தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அடுக்கிய வாக்கியங்கள் இவை.

தொடர்ந்து எல்ஜிபிடிக்யூ+ தொடர்பான வழக்குகளில் ஆக்கபூர்வமான கருத்துகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்து வருகிறார். அந்த வகையில், 'பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு எல்ஜிபிடிக்யூ+ மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், சவால்களையும் அறிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்' என்ற உத்தரவை தமிழக துறைக்கு இப்போது வழங்கியிருக்கிறார். ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சிகள் சுமார் 6 முதல் 8 வாரங்கள் அளிக்கப்பட வேண்டும். இந்தப் பயிற்சியை அரசு சார்ந்த நிறுவனங்கள் அளிக்காமல் எல்ஜிபிடிக்யூ+ சமூகத்துக்காக இயங்கும் அமைப்புகள், மருத்துவர்கள், எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தினரால் வழங்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை என்பதால், பயிற்சிகளை உடனடியாக துவக்கலாம் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TlYI1kz
via IFTTT