89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ரூ.50-க்கு ஆரோக்கிய அன்லிமிடெட் மீல்ஸ்: கர்நாடகாவில் ஈர்க்கும் தாத்தா - பாட்டி உணவகம்!

ரூ.50-க்கு ஆரோக்கிய அன்லிமிடெட் மீல்ஸ்: கர்நாடகாவில் ஈர்க்கும் தாத்தா - பாட்டி உணவகம்!

பெங்களூரு: ரூ.50-க்கு அன்லிமிடெட் ஆரோக்கிய மீல்ஸ் வழங்கும் உணவகம் நடத்தும் கர்நாடகாவைச் சேர்ந்த வயதான தம்பதியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி கவனம் ஈர்த்துள்ளது.

கர்நாடக மாநிலம், மணிபாலில் சிறிய உணவகம் நடத்தி வரும் இந்த வயதான தம்பதியினர். குறைந்த விலையில் ஆரோக்கியம் மிகுந்த உணவைத் தருகின்றனர். '50 ரூபாய்க்கு அன்லிமிடெட் உணவு' என்பதே இந்த உணவகத்தின் சிறப்பு. உணவை வாழை இலையில் கொடுக்கிறார்கள். இந்த அன்லிமிட்டெட் மீல்ஸ்ஸில் சாதம், ரசம், பருப்பு, பொரியல், ஊறுகாய், சாலட் மற்றும் தயிர் ஆகியவை இடம்பெறுகின்றன. குறிப்பாக, இந்த மீல்ஸ் ஆரோக்கியமான உணவாகவே தயாராகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CnJISU5
via IFTTT