89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 5 முதல் 7 லி. வரை தண்ணீர் குடிக்கணும்!' - கோடை வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளும் தடுப்பு வழிகளும்

5 முதல் 7 லி. வரை தண்ணீர் குடிக்கணும்!' - கோடை வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளும் தடுப்பு வழிகளும்

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. இயல்பைவிட வெப்பம் அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடும். வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் பார்ப்போம். மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். சுற்றுப்புற வெப்பநிலை சராசரி வெப்பநிலையைவிட அதிகமாகும்போது வியர்வை, தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பம் வெளியேறி உடல் சராசரி வெப்பநிலையை அடைகிறது.

கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உப்புச் சத்துப் பற்றாக்குறையும் நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்படுகின்றன. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்படலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/U4ajXLW
via IFTTT