89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : உத்தராகண்டின் ஹரித்வாரில் ரஷ்ய தம்பதிகள் இந்து முறைப்படி திருமணம்

உத்தராகண்டின் ஹரித்வாரில் ரஷ்ய தம்பதிகள் இந்து முறைப்படி திருமணம்

ஹரித்வார்: உத்தராகண்ட்டின் ஹரித்வாரில் இரு ரஷ்ய தம்பதிகள் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கை நதிக் கரையில் ஹரித்வார் அமைந்துள்ளது. இது இந்துக்களின் புனித தலமாகும். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்துஆண்டுதோறும் சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்டோர் ஹரித்வாருக்கு வருகை தருகின்றனர். ரஷ்யாவில் இருந்து சுமார் 4,000 கி.மீ. தொலைவு பயணம் செய்து இரு தம்பதிகள் அண்மையில் ஹரித்வாருக்கு வந்தனர். ஏற்கெனவே திருமணமான இரு தம்பதிகளும் இந்து முறைப்படி அங்குள்ளஆசிரமத்தில் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். இந்திய பாரம்பரிய உடை அணிந்து, நெற்றியில் திலகமிட்டு அக்னியை சுற்றி 7 அடி நடந்து இருதம்பதிகளும் திருமணம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6kXWfGS
via IFTTT