89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஈரோடு பெரிய மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

ஈரோடு பெரிய மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

ஈரோடு நகரின் மையப்பகுதியில், மீனாட்சி சுந்தரனார் சாலையில், மாநகராட்சி அலுவலகத்தின் எதிர்புறத்தில் பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஈரோட்டின் காவல் தெய்வமாக போற்றப்படும் பெரிய மாரியம்மன் கோயிலின் கிழக்கு பிரகாரத்தில் நாச்சியார் சிலையும், மேற்கு பிரகாரத்தில் பரசுராமரும், பட்டாலம்மனும் எழுந்தருளியுள்ளனர்.

கருவறையில், கரங்களில் நாக பந்தத்துடன் உடுக்கை, பாசம், கபாலம், கத்தி ஆகியவற்றுடன் அமர்ந்த கோலத்தோடு இருக்கும் அன்னையை கண் குளிர வழிபடலாம். இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பின் கீழ் உள்ள இக்கோயிலில், காலை 6 மணிக்கு காலை சந்தி பூஜை, பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 6 மணிக்குச் சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cngDRe6
via IFTTT