தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் ராஜராஜ சோழன் பிறந்த உத்திரட்டாதி ஜென்ம நட்சத்திர விழா இன்று (மே 5) நடைபெற்றது.
தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலை இரண்டாம் ராஜராஜசோழன் கட்டுமானம் செய்தார். உலகப் புகழ் பெற்ற யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இக்கோயில், அடிக்கு 1008 சிலைகளைக் கொண்டது என்ற பெருமை உடையதாகும். சிறப்புப் பெற்ற இந்த கோயிலை கட்டிய இரண்டாம் ராஜராஜசோழன் பிறந்த சித்திரை மாத உத்திரட்டாதி நட்சத்திரமான இன்று, கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சார்பில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வரலாற்று தகவல்களைப் பகிரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p53XFHn
via IFTTT