89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : யார் உங்கள் வீட்டு எஜமானி...? - மகளின் சேட்டையும், தந்தையின் செய்கையும் | வைரல் வீடியோ

யார் உங்கள் வீட்டு எஜமானி...? - மகளின் சேட்டையும், தந்தையின் செய்கையும் | வைரல் வீடியோ

அப்பாக்களுடன் இருக்கும் எல்லா நேரங்களிலும் மகள்கள் இளவரசிகளாகளாகி விடுகிறார்கள், தகப்பன்கள் சேவகர்களாகளாக மாறிவிடுகிறார்கள். அதேபோல மகள்களிடம் மட்டும்தான், எல்லா அப்பாக்களும் எள் என்பதற்குள் எண்ணெய் ஆக மாறி, தீயாக வேலை செய்யணும் குமாரு மோடுக்கு சென்று விடுகிறார்கள். அப்பாக்களுக்கும் மகள்களுக்குமான ஆத்மார்த்தமான, அழகான உறவு இன்னும் சரியாக பதிவு செய்யப்பட வில்லை என்ற போதிலும், எல்லா அப்பா - மகள்களுக்கும் அந்த அன்பின் உறவை கவிதைகளாக்கி பரிசளித்துக் கொண்டே இருக்கிறது வாழ்க்கை.

அப்படி ஓர் அன்பின் கவிதை ஒன்று இணையவாசிகளின் இதயங்களைக் கொள்ளை கொண்டு வருகிறது. "ஒர்டிஸ்ஃபேமிலி275" என்ற பயனர், அப்பா மகளின் சேட்டை வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தச் சின்னப்பெண் எல்லோரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாள் என்ற வாசகத்துடன் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Hm6PNLs
via IFTTT