89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 89 | திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில்

108 வைணவ திவ்ய தேச உலா - 89 | திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில்

திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 89-வது திவ்ய தேசம் ஆகும். இங்கு மற்ற கோயில்களைப் போலல்லாமல் கொடிமரம் விலகி இருப்பது தனிச்சிறப்பு. இத்தலத்தை திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமழிசை ஆழ்வார் பாசுரம்:

கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும்பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
திரண்ட தோள் இரணியன் சினங்கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே.



மூலவர்: வைஷ்ணவ நம்பி | தாயார்: குறுங்குடிவல்லி நாச்சியார் | தீர்த்தம்: திருப்பாற்கடல், பஞ்சதுறை



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yNRM3Yp
via IFTTT