89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வாகனத்தை வழிமறித்து உடன்பிறப்புகளை காக்க முனையும் சிறுமி: வைரல் வீடியோ

வாகனத்தை வழிமறித்து உடன்பிறப்புகளை காக்க முனையும் சிறுமி: வைரல் வீடியோ

அக்கா உடையவர்கள் இன்னொரு அம்மா உடையவர்கள் என்று சொல்வதுண்டு. தாய்ப் பாசத்திற்கு இணையானது தமக்கையின் பாசம். அப்படி தன் உடன்பிறப்புகளை காக்கும் முனைப்புடன் சின்னஞ்சிறிய அக்கா ஒருத்தியின் பாசம் இணையத்தில் வைரலாகி வருகிறது. Yoda4ever என்ற பயனர் ட்விட்டரில் பதிந்துள்ள 25 விநாடிகள் கொண்ட அந்த வீடியோ, அக்கா ஒருவர் தனது உடன்பிறந்தவர்களிடம் கொண்டுள்ள கலப்படமற்ற அன்பை வெளிப்படுத்துவதாய் இருக்கிறது.

அந்த வீடியோவில், ஒரு கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கும் இடம் ஒன்றின் அருகிலுள்ள சாலையில் மூன்று சிறுவர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். அப்போது அந்த வழியாக முன்பக்கமாக பாரம் ஏற்றியபடி ஒரு வாகனம் வருகிறது. உடனடியாக அந்த மூன்று சிறுவர்களில் மூத்தவள் தனது இரண்டு பிஞ்சுக் கரங்களையும் நீட்டியபடி வண்டியை நிறுத்துமாறு சமிக்ஞை செய்கிறார். கூடவே, தனது உடன்பிறப்புகள் முன்னே சென்றுவிடாதபடி அவர்களுக்கு முன் ஒரு கவசமாக நிற்கிறாள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5WM3gQU
via IFTTT