89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பிளாஸ்டிக் மாற்றாக மாட்டுச் சாணத்திலிருந்து பாசி மாலைகள்: புதிய முயற்சியில் இயற்கை விவசாயி

பிளாஸ்டிக் மாற்றாக மாட்டுச் சாணத்திலிருந்து பாசி மாலைகள்: புதிய முயற்சியில் இயற்கை விவசாயி

மதுரை: நாட்டு மாட்டுச் சாணத்திலிருந்து கழுத்தில் அணியும் பாசி மாலை எனும் மதிப்புக்கூட்டிய பொருட்களை உருவாக்குவதன் மூலம் ஒரு கிலோ சாணத்திற்கு ரூ.300 விலை கிடைப்பதாக இயற்கை விவசாயி பா.கணேசன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் பா.கணேசன் (வயது 52). இயற்கை விவசாயியான இவர் நாட்டு மாட்டுச் சாணம் மற்றும் கோமியத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது கழுத்தில் அணியும் பாசிமாலைகளையும் உருவாக்கி வருகிறார். இதன் மூலம் ஒரு கிலோ சாணத்திலிருந்து ரூ.300 மதிப்பிலான கலைப்பொருட்களை உருவாக்கியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/udYfyM3
via IFTTT