89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘அம்மா சொன்னது கதை அல்ல...’ - உக்ரைனின் மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்த WWE நட்சத்திரம் ஜான் சீனா!

‘அம்மா சொன்னது கதை அல்ல...’ - உக்ரைனின் மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்த WWE நட்சத்திரம் ஜான் சீனா!

உக்ரைன் - ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்த தனது 19 வயது மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்து ஊக்கம் கொடுத்துள்ளார் WWE நட்சத்திரம் ஜான் சீனா. இந்த உருக்கமான சந்திப்பு குறித்து பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது WWE.

WWE நட்சத்திர வீரரும், நடிகருமான ஜான் சீனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரது ஆட்ட முறை மற்றும் அவரது துடிப்பான செயல்பாட்டை பார்க்கவே அமர்க்களமாக இருக்கும். சீனா ரிங்கிற்குள் என்ட்ரி கொடுக்கும்போது வரும் தீம் மியூசிக்கை அவரது ரசிகர்கள் பலரும் ரிங்க்டோன்களாக வைத்திருப்பது வழக்கம். 16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்றவர் ஜான் சீனா. கடந்த 1999 முதல் தொழில்முறையாக விளையாடி வருகிறார். ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்த வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8sBbtVZ
via IFTTT