89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மாசி பிரதோஷம்; புத வார பிரதோஷம்; நினைத்ததெல்லாம் கைகூடும்! 

மாசி பிரதோஷம்; புத வார பிரதோஷம்; நினைத்ததெல்லாம் கைகூடும்! 


புத வாரம் என்று சொல்லப்படுகிற புதன்கிழமையில் வந்துள்ள பிரதோஷத்தின் போது, அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நந்திதேவரையும் சிவலிங்கத் திருமேனியையும் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், நினைத்த காரியமெல்லாம் கைகூடும். வாழ்வில் சகல வளமும் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.

வழிபாடுகளில், சிவ வழிபாடு உள்ளும்புறமுமாக தெளிவையும் ஞானத்தையும் கொடுக்கக் கூடியது என்பார்கள். சிவ வழிபாடு செய்வதற்கு, மாதந்தோறும் வருகிற திருவாதிரை நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷம். அதேபோல், மாதாமாதம் வருகிற சிவராத்திரி நன்னாள், சிவபெருமானை விரதம் இருந்து தரிசிப்பதும் பூஜிப்பதும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3urP2qw
via IFTTT