89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சுக்ல சதுர்த்தியில் பிள்ளையாருக்கு அருகம்புல்! 

சுக்ல சதுர்த்தியில் பிள்ளையாருக்கு அருகம்புல்! 

சுக்ல சதுர்த்தியில் பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுங்கள். நாளைய தினம் 16ம் தேதி சனிக்கிழமை சுக்ல பட்ச சதுர்த்தி. அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் செல்லுங்கள். வீட்டில் உள்ள பிள்ளையாரை மனதார வணங்குங்கள். சகல கஷ்டங்களையும் தோஷங்களையும் போக்கி அருளுவார் ஆனைமுகத்தான்.

சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு உகந்தது. இந்த நாளில் விரதமிருந்து முருகக் கடவுளை ஆராதிப்பார்கள் பக்தர்கள். அதேபோல் ஏகாதசி திதி என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய நாள். இந்தநாளில், பெருமாள் கோயில்களுக்குச் சென்று தரிசிப்பதும் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வார்கள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XKRtFo
via IFTTT