89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : குலசை தசரா திருவிழா: சென்னை, கோவையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்

குலசை தசரா திருவிழா: சென்னை, கோவையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்

சென்னை: குலசை தசரா திருவிழாவை முன்னிட்டு, சென்னை, கோவையில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் இன்று (அக்.3) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் நடைபெறவுள்ள தசரா திருவிழாவை முன்னிட்டு அக்.16-ம் தேதி வரை சென்னை, கோவையிலிருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக நாள்தோறும் இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nsxT09i
via IFTTT