89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மோகினி அலங்காரத்தில் மலையப்பர் பவனி: கருடசேவையில் 3 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

மோகினி அலங்காரத்தில் மலையப்பர் பவனி: கருடசேவையில் 3 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான நேற்று காலை, உற்சவரான மலையப்பர் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 5-ம் நாள் விசேஷநாளாக கருதப்படுகிறது. ஏனெனில் காலையில் மலையப்பர் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். மாலையில் கருட வாகனத்தில் காட்சியளிக்கிறார். ஆதலால் 5-ம் நாள் விசேஷம் என கூறப்படுகிறது. திருமலையில் நேற்று மட்டும் வாகனமண்டபத்திலிருந்து சுவாமி புறப்பாடு நிகழாமல்,கோயிலில் இருந்து நேரடியாக மோகினி அலங்காரத்தில் மைசூர் மகாராணி அளித்த பல்லக்கில் திருமாட வீதிக்கு சுவாமி புறப்பட்டு வந்து பக்தர்களுக்கு காட்சிஅளித்தார். உடன் ஸ்ரீ கிருஷ்ணரும் தனி பல்லக்கில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gTlOdR0
via IFTTT