89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தை நாடிவரும் வெளிநாட்டு பயணிகள்!

மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தை நாடிவரும் வெளிநாட்டு பயணிகள்!

கோவை: மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டு பயணிகள் தமிழகத்துக்கு அதிகளவில் வரும் நிலையில், கோவையில் மருத்துவ சுற்றுலா நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை சுற்றுலா துறை மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே மருத்துவக் கட்டமைப்பில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்ட சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இதய நோய், புற்றுநோய், நுரையீரல், நரம்பியல், கண் சிகிச்சை பெற வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tkTubSj
via IFTTT