89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அதிபரின் மரண மர்மம் | யாசர் அராஃபத் - கல்லறைக் கதைகள் 4

அதிபரின் மரண மர்மம் | யாசர் அராஃபத் - கல்லறைக் கதைகள் 4

விடுதலைப் போராட்ட வரலாற்றில் உலக அரங்கில் மிகவும் கவனிக்கப்பட்ட தலைவர்களில் மிக முக்கியமானவராக இருந்தவர் யாசர் அராஃபத். இவரது திருமண வாழ்க்கையும் பரபரப்பாகப் பேசப்பட்டது; விமர்சனத்திற்கு உள்ளானது. அதைப் போலவே இவரது மரணமும் பலத்த சந்தேகத்தையும் மர்மத்தையும் உள்ளடக்கியதால், இவரது கல்லறை மீண்டும் திறக்கப்பட்டது. இந்தப் பகுதியில் பார்த்த மற்ற பிரபலங்களுக்கும் அராபத்துக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. மற்ற பிரபலங்களின் உடல்கள், அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடங்களில் புதைக்கப்பட்டன. ஆனால், யாசர் அராஃபத்தின் உடல் அதே கல்லறையில் புதைக்கப்பட்டது.

திருமண சர்ச்சை: அராஃபத் எகிப்தின் கெய்ரோவில் பாலஸ்தீனப் பெற்றோருக்குப் பிறந்தார். 1944இல் கிங் ஃபுவாட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே 1948இல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின்போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபுப் படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்டார். 1950இல் கட்டிடப் பொறியாளர் பட்டம் பெற்றார். தீவிரமான பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் இருந்த யாசர் அராஃபத் 1990இல் தனது 61 வயதில் சுஹா தாவில் என்கிற 27 வயது பாலஸ்தீனக் கிறித்தவப் பெண்ணை மணந்தார். அராஃபத்தின் உதவியாளராகப் பணிபுரிந்தவர் இவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BIDwRfA
via IFTTT