89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கோடம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: செப்.16-ம் தேதி நடைபெறுகிறது

கோடம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: செப்.16-ம் தேதி நடைபெறுகிறது

சென்னை: கோடம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் செப்.16-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அந்த வகையில், புதிதாக வாராஹி, அன்னபூரணி, ஆஞ்சநேயர், பூர்ணா புஷ்கலா சமேத தர்மசாஸ்தா, நாகத்தம்மன், கன்னிமார்கள் சந்நிதிகளோடு, கோயில் தெய்வங்களான விநாயகர், பாலமுருகன், வைஷ்ணவி, மாஹேஸ்வரி, துர்கை, நவக்கிரகங்கள் சந்நிதிகளுடன் அங்காள பரமேஸ்வரிக்கு விமானங்களும் அமைக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oWhUrlx
via IFTTT