89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி அம்மன் தொகுப்பு திட்டத்தில் தரிசனம்: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சிறப்பு ஏற்பாடு

சென்னையில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி அம்மன் தொகுப்பு திட்டத்தில் தரிசனம்: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சிறப்பு ஏற்பாடு

சென்னை: ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா திட்டத்தில் சென்னையில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் தரிசனம் செய்யும் வகையில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா பேருந்துகளை கடந்த 17-ம்தேதி முதல் இயக்கி வருகின்றன. இந்த பேருந்துகள் செவ்வாய்,வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் காலை 8.30 முதல் இரவு 8.30 மணி வரை இயங்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FiXB1rZ
via IFTTT