89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘சென்னானூர் அகழாய்வில் 4,000 ஆண்டு பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டெடுப்பு’

‘சென்னானூர் அகழாய்வில் 4,000 ஆண்டு பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டெடுப்பு’

கிருஷ்ணகிரி: சொன்னானூரில் நடைபெற்றும் அகழாய்வில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டறியப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குநர் பரந்தாமன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் சென்னானுார் மலையடிவாரம் அருகே, 20 ஏக்கர் பரப்பளவில் பழங்காலப் பானையோடுகள் அதிகம் கிடைத்துள்ளன. இப்பகுதி அண்மையில் தமிழக அரசு அகழாய்வு மேற்கொண்ட மயிலாடும்பாறையைப் போன்றுள்ளது. இங்கும், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள் தொடங்கி, உடைந்த புதிய கற்கால கைக்கோடரிகள், இரும்புக் காலத்தை சேர்ந்த கருப்பு சிவப்பு பானையோடுகள், இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட கால எச்சங்களோடு, வரலாற்றுக் காலத்தின் தொடக்கமான சங்க காலத்தைச் சேர்ந்த செங்கற்கள் கிடைத்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LYI7nlC
via IFTTT