ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் சென்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி (37). எஸ்.சி. பிரிவை சேர்ந்த இவருக்கும் விவசாய கூலி தொழிலாளி வெங்கண்ணா என்பவருக்கும் திருமணம் நடந்து, இவர்களுக்கு திரிலோகினி (21) என்கிற மகள் உள்ளார். நாகமணி தனது குடும்பத்தை நடத்த ஆரம்ப கட்டத்தில் அங்கன்வாடி ஆசிரியராகவும், இதனை தொடர்ந்து, விளையாட்டில் அதிக ஆர்வமுள்ள காரணத்தினால் கணவரின் ஒத்துழைப்போடு இவர் கோகோ, கபடி, வாலிபால் போன்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி வந்தார். இதனால் நாகமணி, மாநில, தேசிய அளவில் விளையாட்டில் 10 பதக்கங்களையும், 5 கோப்பைகளையும் வென்றுள்ளார்.
இதனிடையே கடந்த 2007-ல், ஊர்க்காவல் படையில் சேர்ந்தார். இதனை தொடர்ந்து அவர் கடந்த 2020-ல் பெண் கான்ஸ்டபிளாக பணியில் இணைந்தார். இவர் தற்போது தெலங்கானா மாநிலம், முலுகு போலீஸ் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தாயைப் போலவே தானும் பெரிய போலீஸ் அதிகாரியாக வேண்டுமென நாகமணியின் மகள் திரிலோகினியும் பட்டமேற்படிப்பை படித்து கொண்டே, போலீஸாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L7uH3Yw
via IFTTT