89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இரண்டாவது குழந்தை பிறக்கும்போது முதல் குழந்தையை அணுகுவது எப்படி? - ஓர் உளவியல் வழிகாட்டுதல்

இரண்டாவது குழந்தை பிறக்கும்போது முதல் குழந்தையை அணுகுவது எப்படி? - ஓர் உளவியல் வழிகாட்டுதல்

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் மாபெரும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அத்தகைய ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு இன்றியமையாத பங்கு நம் குடும்பம்தான். ஆரோக்கியமான சூழலில் வளரும் குழந்தைகள் நம் சமுதாயத்தினை மேலும் வளமாக மாற்றி அமைப்பார்கள் என்பது உறுதி. அந்த வகையில் முதல் குழந்தைக்கும், அடுத்து பிறக்கும் குழந்தைக்குமான உறவு பாலத்தை செப்பனிடுவது என்பது பெரும் உளவியல் சார்ந்த பிரச்சினை. அதனைச் சரியாகக் கையாண்டால் மட்டும்தான் அவர்கள் ஒருவரின் மீது ஒருவர் வெறுப்புக் கொள்ளாமல் அன்பு செய்து வளர ஏதுவாக அமையும். இதுகுறித்து மனநல மற்றும் மகப்பேறு ஆலோசகர் டீனா அபிஷேக் பகிர்ந்தவை:

“பொதுவாக என்னிடம் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று... “என்னோட மூத்த பையன் எங்கள் வீட்டுக்கு வருபவர்களிடம் ‘எங்க அம்மா கர்ப்பமாக இருக்கிறார்கள்’ என்று மிக ஆர்வமாக சொல்கிறான். எனக்கு இது பயமாகவும், கவலையாகவும் உள்ளது. எப்படி இரண்டு குழந்தைகளையும் சமாளிக்கப் போகிறேன் என்றே தெரியவில்லை” என்பனவாக இப்படி பல கேள்விகள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6GNXCut
via IFTTT