89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இந்திய தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்களிக்கும் கோவை தொழில் நிறுவனங்கள் | கோவை தினம் சிறப்பு

இந்திய தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்களிக்கும் கோவை தொழில் நிறுவனங்கள் | கோவை தினம் சிறப்பு

இந்தியாவில் அரசியல், ஆன்மிகம், இலக்கியம், நாட்டுப்பற்று உள்ளிட்டவை நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நாகரிகம், பண்பாடு, கல்வி, கலை, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது தமிழகம். தொழில்துறையில் கோவை மாவட்டம் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் புகழ் பெற்றுள்ளது. சோதனை, சவால்களை கண்டு முடங்கி விடாமல் தைரியத்துடன் அவற்றை எதிர்கொள்ளும் திறன் கோவை தொழில்முனை வோரிடத்தில் உள்ளதே இதற்கு காரணம்.

பெரிய நூற்பாலைகள் அதற்கு தேவையான மிக உயர்ந்த பொறியியல் தொழிற்சாலைகள், வார்ப்பட தொழிற்சாலைகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், மருத்துவமனைகள் என இப்படி ஒன்றுக்கு ஒன்று சங்கிலித் தொடர் போல கடந்த நூற்றாண்டில் தொடங்கி இன்று வரை வெற்றி நடைபோடுகின்றன. தொழில்நுட்ப கல்வி வளர்ச்சியில் கோவைக்கு என தனி வரலாறே உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dMIROWx
via IFTTT