89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கரோனா தொற்றால் தாயை இழந்ததால் மருத்துவராக விருப்பம்: 59 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி

கரோனா தொற்றால் தாயை இழந்ததால் மருத்துவராக விருப்பம்: 59 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி

பெங்களூரு: கரோனா தொற்றால் தாயை இழந்த இஸ்ரோ விஞ்ஞானி மருத்துவராக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக 59 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து பெங்களூருவைச் சேர்ந்த ராஜன் பாபு (59) கூறியதாவது.

நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் 7-ம் வகுப்புக்கு பிறகு பள்ளி செல்ல முடியவில்லை. சிறு வயதிலேயே நான் கடைகளுக்கு வேலைக்குச் சென்றேன். நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலின்படி, தனித் தேர்வராக 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முதல் வகுப்பில் வெற்றி பெற்றேன். பின்னர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eJ32IcX
via IFTTT