89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பதியில் டிசம்பர் மாத தரிசனத்துக்கு 26-ல் ஆன்லைன் முன்பதிவு

திருப்பதியில் டிசம்பர் மாத தரிசனத்துக்கு 26-ல் ஆன்லைன் முன்பதிவு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 30-ம் தேதி வரை ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. இந்நிலையில் டிசம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் 26-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

தினமும் 35 ஆயிரம் டிக்கெட் வீதம் டிசம்பர் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள், மறுநாள் 27-ம் தேதி காலை 10 மணிக்கு அதே இணைய தளம் மூலம் திருமலையில் தங்கும் அறைக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4IgRUCP
via IFTTT