89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : TTF வாசன் நடத்திய சந்திப்பும் ‘2K கிட்ஸ்’ வாழ்வியலும் - ஒரு விரைவுப் பார்வை

TTF வாசன் நடத்திய சந்திப்பும் ‘2K கிட்ஸ்’ வாழ்வியலும் - ஒரு விரைவுப் பார்வை

TTF வாசன் நடத்திய ‘மீட்டப்’பைத் தொடர்ந்து பலரும் அதுகுறித்து பேசி வருகின்றனர். அதன் சாதகங்களையோ, பாதகங்களையோ பேசுவது முக்கியம் அல்ல. ‘பாப்புலர் கல்ச்சர்’ என்பது நாம் விரும்பும், நமக்குத் தெரியாத வேறொரு உலகத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது.

உதவிப் பேராசிரியராக கடந்த ஓராண்டில் கல்லூரி மாணவர்களுடன் (2K Kids) பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாம் வாழும் வாழ்க்கை, நம் உரையாடல்களில் இருக்கும் பொருள்கள், நமது தேவைகள், ஆசைகள் முதலான அனைத்திற்கும் அப்பாற்பட்டது 2கே கிட்ஸ் வாழ்வு. இணையம் தோன்றிய பிறகு, பல்வேறு கருத்து மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன; பல்வேறு கருத்துகளின் காரணமாக இணைப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், இங்கு ஏற்பட்டிருப்பது ஒரு தலைமுறையின் இடைவெளி. தொண்ணூறுகளில் பிறந்து நைட்டீஸ் கிட்ஸ்களுக்கும், 2கே கிட்ஸ்களுக்கும் இடையிலான தொலைவுமே மிக அதிகம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Rgjx8T9
via IFTTT