89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பணியிடத்தில் பாலின அடையாளத்தை வெளிப்படுத்தலாமா?

பணியிடத்தில் பாலின அடையாளத்தை வெளிப்படுத்தலாமா?

மாற்றுப் பாலினத்தவர், எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.எ. சமூகத்தினரின் சுயமரியாதைப் பேரணி நடக்கும் மாதத்தை ஒட்டி அண்மையில் ‘தோழி, ஓரினம்’ தன்னார்வ அமைப்பினர் `கமிங் அவுட்' எனப்படும் தங்களின் பாலின அடையாளத்தை, பாலியல் ஒருங்கிணைவை வெளிப்படுத்திக் கொள்வதில் இருக்கும் தயக்கங்கள், சிக்கல்களைப் பற்றிய உரையாடலை நடத்தினர்.

புனித தோமையர் மலையில் இருக்கும் புனித டொமினிக் பள்ளியில் மாற்றுப் பாலினத்தவர் தங்களைக் குடும்ப, சமூக அமைப்பில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து தோழி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவேதாஸ்ரீ பேசினார். தொடர்ந்து தன்னுடைய குடும்பத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் ஓரினம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அலெக்ஸ் முருகபூபதி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lZ4xgKO
via IFTTT