89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஆச்சர்யமான நரசிம்மர் கோயில்!!எங்கே?வாங்க பார்க்கலாம்

ஆச்சர்யமான நரசிம்மர் கோயில்!!எங்கே?வாங்க பார்க்கலாம்


*சிம்மாச்சலம்*
விசாகப்பட்டினத்தில் உள்ள நரசிம்ம சேஷத்ரம்!

பிரகலாதன் ஆராதித்த நரசிம்மர். பல ஆண்டுகளாக புற்றினுள் இருந்த இந்த லக்ஷ்மி நாராயண நரசிம்மர், ஒரு பக்தரின் கனவில் தன் இருப்பிடத்தைத் தெரிவித்து, சிம்மாச்சலத்தில் தன்னை ப்ரதிஷ்டை செய்ய நியமித்ததாக வரலாறு!

பின்பு, குளிர் அதிகமாக இருந்ததால், மீண்டும் புற்றினுள்ளேயே தன்னை விடுமாறும், அந்த சீதோஷணத்தை சந்தனம் கொண்டு புற்றை உருவாக்கிவிடவும், வருடத்திற்கு ஒரு நாள் புற்றிலிருந்து வெளியே வந்து தரிசனம் அருளுவதாகவும் நரசிம்மர் ஸங்கல்பிக்க, அன்று முதல் இப்போதும் 500 கிலோ சந்தனத்துடன் மற்ற கலவைகள் 200 கிலோ என 700 கிலோ புற்றினுள் இருக்கிறார் இந்த நரசிம்மர்!

அக்ஷய த்ரிதியை அன்று புற்றினை நீக்கி சேவை சாதிக்கிறார். பின் மீண்டும் 700 கிலோ சந்தனக் கலவை புற்றினுள் புகுந்து *புற்றாகவே சேவை சாதிக்கிறார்*

ஸ்ரீ ராமானுஜர் சிம்மாச்சலம் வந்தபோது, அங்கு சில நாட்கள் விஷயார்த்தங்களை உபந்யாஸமாக சாதிக்க, அதை அனுதினமும் கேட்டுக் கொண்டிருந்த இரண்டு அன்னபறவைகள், காலட்ஷேப முடிவில் பறவை சரீரத்தை துறந்து திவ்ய சரீரம் பெற்று, வைகுந்தம் ஏகினதாக வரலாறு! அவ்வாறு ஸ்ரீ ராமானுஜர் அமர்ந்து உபந்யாஸம் சாதித்த இடத்திற்கு *ஹம்ஸ மூலை* என்ற பெயரானது!