கார்த்திகை மாதத்தின் கடைசி நாள் இன்று. மேலும் கார்த்திகை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை. இந்த அற்புத நாளில், மாலையில் விளக்கேற்றுவோம். அம்பாளையும் திருக்குமரனையும் வழிபடுவோம். நம் இன்னல்களையெல்லாம் போக்கி அருளும் கார்த்திகைச் செவ்வாய் வழிபாட்டை மறக்காதீர்கள். மறக்காமல் வழிபடுங்கள். திருமணத்தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இன்றைய நாளில் விளக்கேற்றி வழிபடுவது விரைவில் திருமண யோகத்தைக் கொடுக்கும். உத்தியோக மேன்மையை வழங்கும், கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
கார்த்திகை மாதம் என்பது சிவனாருக்கும் உகந்த மாதம். முருகப்பெருமானுக்கும் உகந்த மாதம். அம்பாள் வழிபாட்டுக்கும் உகந்த மாதம். கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே எண்ணற்ற ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. திருவிழாக்கள் அமர்க்களப்பட்டன.
முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் கந்தசஷ்டி விழா விமரிசையாக நடைபெற்றன. சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் முருகக் கடவுள் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடந்தேறின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/387f1ZN
via IFTTT