வைஷ்ணவத்தில், கோயில் என்றால் ஸ்ரீரங்கத்தைச் சொல்லுவார்கள். அதேபோல, சைவத்தில் கோயில் என்றாலே சொல்லப்படும் திருத்தலம் சிதம்பரம். பெருமை மிக்க திருத்தலம். ஆடல்வல்லான் என்று அழைக்கப்படும் நடராஜ பெருமான் சிவகாமி அன்னையுடன் குடிகொண்டிருக்கும் தலம் இது.
தில்லை என்றும் தில்லையம்பதி என்றும் போற்றப்படுகிறது சிதம்பரம். தில்லை எனும் மரங்கள் சூழ்ந்திருந்ததால் தில்லையம்பதி என அழைக்கப்பட்டது.
புலிக்கால் முனிவர் என்ற வியாக்ரபாதருக்கும், ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று தில்லையில் இறைவன் ஆனந்த நடனத் திருக்காட்சி அளித்தான் என ஸ்தல புராணம் விவரிக்கிறது. அவர்களுக்குக் காட்சியளித்த அன்று தொட்டு இறைவன் அங்கே ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாய் எழுந்தருளி ஆன்மாக்களுக்கு அருள் வழங்கி வருகிறான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WRIkdE
via IFTTT