89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சாமை உணவு ரெசிபிகள்

சாமை உணவு ரெசிபிகள்

சாமை தோசை:



  • சாமை - 1கப்
  • உளுந்து - 3 தேக்கரண்டி
  • வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
சாமை,உளுந்து,வெந்தயம் மூன்றையும் 1 முதல் 2 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்.பின் உப்பு சேர்த்து புளிக்க வைத்து விருப்பப்படி தேவைக்கேற்ப தேங்காய் துருவல்,வெங்காயம் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ மொறு மொறுவென தோசையாக வார்த்து சட்னி,சாம்பாருடன் சாப்பிடலாம்.

சாமை கொழுக்கட்டை
  • சாமை - 1 கப்
  • துவரம் பருப்பு- 1/4 கப்
  • மிளகு - 4 அல்லது 5
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • இஞ்சி - 1 துண்டு
  • துருவிய தேங்காய் - 1 மேஜைக்கரண்டி
  • தாளிக்க எண்ணை,கடுகு,உளுந்தம்ப்பருப்பு,கடலைப்பருப்பு,கறிவேப்பிலை
  • உப்பு
  • பெருங்காயப்பொடி
  • காய்ந்த மிளகாய் - 2
துவரம் பருப்பு,மிளகு,சீரகம் லேசாக வறுத்து குருணையாக மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும் .அதனுடன் சுத்தம் செய்த சாமையையும் குருணையாக உடைத்து சேர்த்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு,கிள்ளிய காய்ந்த மிளகாய்,உளுந்தம்பருப்பு,கடலைப்பருப்பு,கறிவேப்பிலை,இஞ்சி போட்டு தாளித்து
3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

பிறகு அதில் சாமைக்குருணையை கொட்டி கிளறி உருண்டை பிடிக்கும் பதம் வந்ததும் இறக்கி வைத்து சூடு ஆறிய பின் உருண்டைகளாக பிடித்து இட்லி பானையில் வேக விட்டு எடுக்கவும்.

சட்னியுடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.

சாமையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்

  • புரதம்(கி)- 7.7
  • பொட்டாசியம்(கி) - 5.4
  • கொழுப்பு(கி) - 4.7
  • நார்ச்சத்து(கி) - 7.6
  • கார்போஹைட் ரேட்(கி) - 67.0
  • ஆற்றல்(கிலோ கலோரி) - 341
  • கால்சியம்(கி) - 17
  • இரும்புச்சத்து(மி கி) - 9.3
  • தயமின்(மி கி) - 0.3
  • ரிபோபிளேவின்(மி கி) - 0.09ள்
  • நியாசின்(மி கி) - 3.2
அசதியும் தளர்ச்சியும் நீங்க சரிவிகித உணவு சாமை
சாமை உடல் அசதி மற்றும் தளர்ச்சி நீக்கி சுறுசுறுப்பு தரும்.எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்கும்.இதை தொடர்ந்து சாப்பிட முதுகெலும்பு பலப்படும்.குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் அடிக்கடி பயணம் செய்வதால் ஏற்படும் முதுகு வலி குறையும்.