89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சத்தான கம்பு மாவு ரெசிபிகள்

சத்தான கம்பு மாவு ரெசிபிகள்


1. கம்பு மாவு புட்டு:
  • கம்பு மாவு - 1 கப்
  • துருவிய தேங்காய்- 1 கப்
  • ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
  • {சர்க்கரை
  • உப்பு
  • நெய்} தேவையான அளவு
  • முதலில் கம்பு மாவை 1 மேஜைக்கரண்டி நெய் விட்டு மிதமான சூட்டில் வறுக்கவும்.
  • பின்னர் வறுத்த மாவுடன் உப்பு சேர்த்துசிறிது தண்ணீர் தெளித்து ஒன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்னர் புட்டு குழாயில் வைத்து வேக வைக்கவும்.
  • வெந்ததும் தேங்காய்,சர்க்கரை,ஏலப்பொடி,நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.
  • சத்தான கம்பு மாவு ரெசிபிகள்
    2. கம்பு லட்டு:
    • கம்பு மாவு - 1 கப்
    • வெல்லம் - 11/5 கப்(ஒன்றறைக்கப்)
    • தேங்காய் - 1/4 கப்
    • ஏலக்காய் பொடி- 1/4 ஸ்பூன்
    • நெய் - 1 மேஜைக்கரண்டி
    • முந்திரிப்பருப்பு. - 8 முதல் 10 எண்ணிக்கை வரை
    • முதலில். கம்பு மாவை 1 ஸ்பூன் நெய் விட்டு வறுக்கவும்
    • அதனுடன் துருவிய வெல்லம்,தேங்காய் சேர்த்து கிளறவும்
    • இறக்கி வைத்து அதனுடன் நெய்,முந்திரிப்பருப்பு(துண்டுகளாகவோ,பொடித்தோ) சேர்த்து கிளறி லட்டுகளாக பிடிக்கவும்.

    • 100கிராம் கம்பு தானியத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
      1. புரதம்(கி). - 11.60
      2. கொழுப்பு(கி) - 5.6
      3. பொட்டாசியம்(கி) - 2.2
      4. நார்ச்சத்து(கி) - 1.2
      5. கார்போஹைறேட்(கி) - 67.5
      6. ஆற்றல்(கிலோ கலோரி) - 361.0
      7. கால்சியம்(மி கி) -42
      8. இரும்புச்சத்து(மி கி) - 8.0
      9. தயமின்(மி கி) - 0.33
      10. ரிபோபிளேவின்(மி கி) - 0.25
      11. நியாசின்(மி கி) - 2.30
      இரத்த அபிவிருத்திக்கு இரும்பு சத்து அதிகம் உள்ள கம்பு உணவினை எடுத்துக்கொள்ளுங்கள்.
      மற்ற தானியங்களை விட கம்பு அதிகபுரதசத்து மட்டுமல்லாது அமினோ அமிலங்களை அதிகம் பெற்று தரம் வாய்ந்ததாக விளங்குகின்றது. போதிய அளவு மாவு சத்தும்,அதிக ருசியை கொடுக்கக்கூடிய கொழுப்பும்,வைட்டமின்களும்,தாது உப்புக்களும் இத்தானியத்தில் நிறைந்துள்ளன.மேலும் இரத்த அபிவிருத்திக்கான இரும்பு சத்து மற்ற தானியங்களை விட கம்பில் அதிகம் உள்ளது