89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவு..!

குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவு..!

குழந்தையின்  நோய்  எதிர்ப்புச் 
சக்தியை  அதிகரிக்கும்  உணவு..!


வேர்க்கடலை இடியாப்பம்

தேவையானவை
  • இடியாப்பம் - ஒரு கப், 
  • பெரிய வெங்காயம், 
  • தக்காளி - தலா 2 (பொடியாக நறுக்கவும்), 
  • வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு, 
  • பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கவும்), 
  • நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, 
  • மிளகாய் தூள் - அரை டீஸ்பூன், 
  • மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, 
  • மல்லித்தூள் (தனியாத்தூள்) - கால் டீஸ்பூன், 
  • கரம் மசாலா தூள் - ஒரு சிட்டிகை, 
  • சோம்பு - ஒரு டீஸ்பூன், 
  • கறிவேப்பிலை - சிறிதளவு, 
  • தேங்காய்ப்பால் - ஒரு டேபிள்ஸ்பூன், 
  • இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், 
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு, 
  • செய்முறை: வேர்க்கடலையை வேகவைக்கவும். காய்ந்த வேர்க்கடலை யாக இருப்பின் முதல் நாளே ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். இடியாப்பம் ஆறவிடவும்.

வாணலியை அடுப்பில் ஏற்றி, எண்ணெய் ஊற்றி, சோம்பு, கறிவேப்பிலை தாலி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும். இதனுடன், வேகவைத்த வேர்க்கடலை சேர்த்து நன்கு வதக்கவும். மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, தேங்காய்ப்பால் சேர்த்து, உடனே இடியாப்ப அத்தையும் சேர்க்கவும். தீயைக் குறைத்து, நன்கு புரட்டி, கொத்தமல்லி தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.