89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சிறு தானிய உணவு ரெசிப்பிகள்

சிறு தானிய உணவு ரெசிப்பிகள்

தினை பாயசம்
  • தினை - 200 கிராம்
  • பனை வெல்லம் - 250 கிராம்
  • ஏலக்காய் பொடி - 5 கிராம்
  • முந்திரி,திராட்சை - தேவைக்கேற்ப
  • நெய் - 1 தேக்கரண்டி
  • துருவிய தேங்காய் / தேங்காய்ப்பால் - 100 மில்லி 
நன்கு சுத்தம் செய்த தினையை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறவைத்த தினையை அடி கனமான பாத்திரத்தில் போட்டு குழைய வேக வைக்கவும்.

பொடித்த வெல்லத்தை சிறிது நீர் விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டி வெந்த தினையுடன் சேர்க்கவும்.

பிறகு தேங்காய் பூ அல்லது தேங்காய் பால், மெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை,ஏலக்காய் பொடி போட்டு இறக்கவும்.





தினை அடை
  • தினை - 1கப்(200கிராம்)
  • கடலைப்பருப்பு - 1/2 கப்
  • உளுத்தம் பருப்பு - 1/4 கப்
  • துருவிய தேங்காய் - 1/4 கப்
  • பெரிய வெங்காயம் - 1
  • முட்டைக்கோஸ் நறுக்கியது - 1/2 கப்.
  • கறிவேப்பிலை - 1 கைப்பிடி
  • காய்ந்தமிளகாய் - 3
  • மிளகு - 1/2 தேக்கரண்டி
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயப்பொடி - 1/2 தேக்கரண்டி
  • உப்பு,எண்ணெய் தேவையான அளவு
நன்கு சுத்தம் செய்த தினை,கடலைப்பருப்பு,உளுந்தம்பருப்பு மூன்றையும் தனித்தனியே ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

தனித்தனியே குறுணையாக அரைத்து ஒன்றாக கலக்கவும்.அதனுடன் மிளகு,சிரகம்,
காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து அரைத்து உப்பு சேர்க்கவும்.

3மணி நேரம் அப்படியே வைக்கவும்.

அடை செய்வதற்கு முன் நறுக்கிய வெங்காயம்,முட்டைக்கோஸ்,துருவிய தேங்காய்,
பெருங்காய பொடி சேர்த்து கொள்ளவும்.

தோசைக்கல் காய்ந்தவுடன் எண்ணெய் தடவி அடை வார்க்கவும்.

தொட்டுக்கொள்ள எள் பொடி (அ) மிளகா பொடி (அ) அவியல் சுவையாக இருக்கும்.



தினையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
  • புரதம் (கி) - 12.3
  • கொழுப்பு (கி) - 4.3
  • பொட்டாசியம் (கி) - 3.3
  • நார்ச்சத்து (கி) - 8.0
  • கார்போஹைட் ரேட்.(கி) - 60.9
  • ஆற்றல் (கிலோ கலோரி) - 331
  • கால்சியம் (மி கி) - 31
  • இரும்புச்சத்து(மி கி) - 2.8
  • தயமின் (மி கி) - 0.59
  • ரிபோபிளேவின்(மி கி) - 0.11
  • நியாசின்(மி கி) - 3.2
நோய் அற்ற திண்மையான வாழ்விற்கு தினை 
உடலில் கபம் ஆதிக்கம் அதிகரித்து அதனால் அடிக்கடி சளி,காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் தினை அரிசியை சாதம் செய்துசாப்பிடலாம்.இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.