89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கந்த சஷ்டி திருவிழா: கழுகுமலை கோயிலில் நடந்த தாரகாசூரன் சம்ஹாரம்!

கந்த சஷ்டி திருவிழா: கழுகுமலை கோயிலில் நடந்த தாரகாசூரன் சம்ஹாரம்!

கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் கந்தசஷ்டி திருவிழாவில் பக்தர்களின் வெற்றி வேல், வீரவேல் கோஷங்களுக்கு இடையே தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது. நாளை மாலை இங்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.

பிரசித்திபெற்ற குடைவரை கோயிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில், 5-ம் நாளான இன்று தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு சந்தி கால பூஜை நடந்தது. காலை 10 மணிக்கு சுவாமி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, தூது சென்ற வீரபாகுவை சூரர்கள் சிறைபிடித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2pc19U6
via IFTTT