வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே நூற் றாண்டு பழமை வாய்ந்த ஜமீன் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்ட கல்லறை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு மற்றும் திருப்பத்தூர் மாவட்டத் தொன்மைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த சமூக ஆர் வலர் ராதாகிருஷ்ணன், முத்தமிழ் வேந்தன் மற்றும் சந்திரசேகரன், மகேந்திரன் ஆகியோர் பல்வேறு இடங்களில் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வாணியம்பாடியில் மேற்கொண்ட கள ஆய்வில், பழமை வாய்ந்த அழகிய கல்லறை ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தியாளரிடம் கல்லூரி உதவி பேராசிரியர் ஆ.பிரபு கூறும்போது, ‘‘திருப் பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தமிழகம்-ஆந்திர எல்லைப் பகுதியில், அதாவது வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை, பில்லூர் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகத் நாங்கள் மேற்கொண்ட கள ஆய்வில், வாணியம்பாடி அருகே நாட் றம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள மண்ணாற்றின் கரையோரம் ‘சமாதித்தோப்பு’ என்ற இடத்தில் சிதிலமடைந்த நிலையில் மாளிகை போன்ற அமைப்பு கொண்ட பழமையான கட்டிட அமைப்பு ஒன்றை நாங் கள் கண்டறிந்தோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/x9U8Wvb
via IFTTT