89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருச்செந்தூர் கந்த சஷ்டி பெருவிழா: சூரசம்ஹார நிகழ்வில் 6 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வர் என தகவல்

திருச்செந்தூர் கந்த சஷ்டி பெருவிழா: சூரசம்ஹார நிகழ்வில் 6 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வர் என தகவல்

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி பெருவிழா நவம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது. சூரசம்ஹார நிகழ்வில் சுமார் 6 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி பெருவிழா நவ.2-ம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான 7-ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரத்தில் சுமார் 6 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு கந்தசஷ்டி பெருவிழா நவம்பர் 2-ம் தேதி தொடங்கி, நவம்பர் 7-ம் தேதி சூரசம்ஹாரமும், 8-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wPU6q7r
via IFTTT