89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சென்னை: சென்னை கொசப்பேட்டையில் உள்ள ஆதரவற்ற இல்லத்தில் தங்கியிருக்கும் பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. எல்ஐசி பயிற்சி மைய முன்னாள் முதல்வர் எம்.கே.கருப்பையாவின் மூத்த மகள் சூர்யா கடந்த 2014-ம் ஆண்டு மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார். அவரது நினைவாக மருத்துவர் கே.சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையை குடும்பத்தினர் தொடங்கினர்.

இந்நிலையில் மருத்துவர் சூர்யாவின் பிறந்தநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை கொசப்பேட்டையில் உள்ள ரெயின்போ ஹோம்ஸ் இல்லத்தில் கேக் வெட்டி அங்கு தங்கியிருக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tQAFfMe
via IFTTT