89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சோரியாசிஸ் பாதிப்புக்கு புதிய தீர்வு: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இணைந்து தூத்துக்குடி அரசு மருத்துவர்கள் சாதனை

சோரியாசிஸ் பாதிப்புக்கு புதிய தீர்வு: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இணைந்து தூத்துக்குடி அரசு மருத்துவர்கள் சாதனை

தூத்துக்குடி: ஜப்பானிய விஞ்ஞானிகளுடன் இணைந்து தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், சோரியாசிஸ் பாதிப்புக்கு புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தோல் மருத்துவத்துறை தலைவர் ஜே.ததேயுஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''சோரியாசிஸ் நோய்: சோரியாசிஸ் என்பது பல காரணிகளால் ஏற்படும் அழற்சி தோல் நோயாகும். இது மொத்த மக்கள் தொகையில் 2 முதல் 3 சதவீதம் பேரை பாதிக்கிறது. இவர்களில் சுமார் 20 முதல் 30 சதவீத நோயாளிகள், மூட்டுகளையும் தாக்கும் சோரியாடிக் ஆர்த்ரைடிஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சோரியாசிஸ் நோய்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இன்னும் இதற்கான ஒரு முழு தீர்வு அளிக்கும் சிகிச்சை முறை எட்டப்படவில்லை. எனவே, நோயை மாற்றியமைக்கும் அல்லது தீவிரத்தை குறைக்கும் சிகிச்சைகளே நடைமுறையில் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w0tfv5V
via IFTTT