89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 3 அடி உயர பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்: தி.மலை அரசு மருத்துவர்கள் சாதனை

3 அடி உயர பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்: தி.மலை அரசு மருத்துவர்கள் சாதனை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக பிரசவம் பார்த்து, மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலஸ்தாம்பாடி கிராமத்தில் வசிப்பவர் டிராக்டர் ஓட்டுநர் சக்திவேல் (23). இவரது மனைவி ராஜேஸ்வரி (22). இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. கர்ப்பிணியான ராஜேஸ்வரி, செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு சென்று வந்துள்ளார். இவர், 3 அடி உயரமே இருந்ததால், பிரசவத்தில் சிக்கல் ஏற்படக் கூடும் என கருதிய மருத்துவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரை செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FORLToq
via IFTTT