ரியாசி: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு சாலை அமைக்கும் வகையில் தங்களது நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர் இரு இஸ்லாமியர்கள். அவர்களது இந்தச் செயல் மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
ரியாசியில் அமைந்துள்ள குப்த் காசி - கௌரி சங்கர் கோயிலுக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், கேரல் ஊராட்சியில் வசித்து வரும் குலாம் ரசூல் மற்றும் குலாம் முகமது ஆகிய இருவரும், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்களது நிலத்தை சாலை அமைக்க தானமாக வழங்கியுள்ளனர். இதன் பரப்பளவு சுமார் அரை ஏக்கர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fBu1qPp
via IFTTT