89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சித்ரா பவுர்ணமி: திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பல்லாயிரம் பக்தர்கள்!

சித்ரா பவுர்ணமி: திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பல்லாயிரம் பக்தர்கள்!

தூத்துக்குடி: சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இரவு முழுவதும் விடிய விடிய வழிபாடு நடத்தினர்.

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் உள்ளது. பவுர்ணமி தோறும் கொங்கு மண்டல பகுதியை சேர்ந்த பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் பவுர்ணமி தினத்தன்று கோயில் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கியிருந்து சமுத்திரத்துக்கு அபிஷேகம், தீபாராதனை செய்து வழிபட்டு செல்கின்றனர். அதன்படி இந்த ஆண்டும் அவர்கள் திருச்செந்தூர் வந்து கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தங்கியிருந்து சமுத்திரத்துக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xowgAsS
via IFTTT