89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சிநேகா தற்கொலை தடுப்பு நிறுவனம் சார்பில் ‘தற்கொலைக்கு பிறகு ஆதரவு’ திட்டம் தொடக்கம்

சிநேகா தற்கொலை தடுப்பு நிறுவனம் சார்பில் ‘தற்கொலைக்கு பிறகு ஆதரவு’ திட்டம் தொடக்கம்

சென்னை: தற்கொலை உணர்வால் பாதிக்கப்பட்டவர்களை அந்த எண்ணத்தில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் சிநேகா தற்கொலை தடுப்பு நிறுவனம் சென்னையில் 38 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நெருக்கமான ஒருவரை தற்கொலை மூலமாக இழந்தவர்களுக்கும், தற்கொலை எண்ணம் வராமல் தடுக்க இந்த நிறுவனம் சார்பில், ‘எஸ்ஏஎஸ்’ எனப்படும் ‘தற்கொலைக்கு பிறகு ஆதரவு’என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சிநேகா தற்கொலை தடுப்பு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார், தலைவர் நல்லி குப்புசாமி, இயக்குநர் எம்.சி.ஆனந்த் ஆகியோா் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VsEv7pT
via IFTTT