89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கள்ளழகரை காண வரும் பக்தர்களுக்கு தர்ப்பூசணி - 8 ஆண்டுகளாக வழங்கும் தொழிலாளி

கள்ளழகரை காண வரும் பக்தர்களுக்கு தர்ப்பூசணி - 8 ஆண்டுகளாக வழங்கும் தொழிலாளி

மதுரை: தேனூர் மண்டபத்தில் எழுந் தருளும் கள்ளழகரை காணவரும் பக்தர்களின் தாகம் தீர்க்கும் வகையில், தொழிலாளி ஒருவர் கடந்த 8 ஆண்டுகளாக தர்ப்பூசணி வழங்கி வருகிறார்.

மதுரை மாவட்டம், தேனூரைச் சேர்ந்த தொழிலாளி சடையாண்டி. இவரது மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு மீனாட்சி (11), தேஜா என்ற 2 பெண் குழந்தைகள். கள்ளழகரிடம் வேண்டிய படியே இரண்டாவதும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. அதன்படி, தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நாளில் பக்தர்கள் அனைவருக்கும் தர்ப்பூசணியை இலவசமாக வழங்கி வருகின்றனர். நேற்று 8-வது ஆண்டாக ஒன்றரை டன் தர்ப்பூசணியை இலவசமாக வழங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BCqx61G
via IFTTT